/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீரில் சுவையில்லை: எம்.பி.,யிடம் புகார் மனு தரத்தை மீண்டும் பரிசோதிக்க அதிகாரிக்கு உத்தரவு
/
குடிநீரில் சுவையில்லை: எம்.பி.,யிடம் புகார் மனு தரத்தை மீண்டும் பரிசோதிக்க அதிகாரிக்கு உத்தரவு
குடிநீரில் சுவையில்லை: எம்.பி.,யிடம் புகார் மனு தரத்தை மீண்டும் பரிசோதிக்க அதிகாரிக்கு உத்தரவு
குடிநீரில் சுவையில்லை: எம்.பி.,யிடம் புகார் மனு தரத்தை மீண்டும் பரிசோதிக்க அதிகாரிக்கு உத்தரவு
ADDED : மார் 07, 2024 04:18 AM
அவிநாசி, : 'அவிநாசி பேரூராட்சியில், வினியோகிக்கப்படும் குடிநீர் தரத்தை மீண் டும் பரிசோதிக்க,' எம்.பி., ராஜா அறிவுறுத்தினார்.
நேற்று நடந்த வளர்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், பங்கேற்ற எம்.பி., ராஜாவிடம், பொதுமக்கள் சார்பில், நல்லது நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் ரவிக்குமார் அளித்த மனு:
அவிநாசி பேரூராட்சி பகுதியில், தற்போது பயன்பாட்டில் உள்ள 4வது குடிநீர் திட்டம் செயல்படுத்த துவங்கியது முதல் இப்பகுதியில் சளி, காய்ச்சல், உடல் வலி உள்ளிட்ட உபாதைகளால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டனர்.
கொரோனா காலகட்டத்தால் அதனை பெரிதுபடுத்தாமல் இருந்தனர். தற்போதும் அந்த சூழ்நிலை தொடர்வதால் தாங்கள் பயன்படுத்தி வரும் குடிநீரின் தரம் குறித்து பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்தது.
இதனால் கடந்த ஒரு ஆண்டாக பொதுமக்கள் பலரும் பேரூராட்சி மூலம் வழங்கப்படும் நான்காவது குடிநீர் திட்டத்தின் தரம் குறித்து, பேரூராட்சி நிர்வாகத்தில் புகார் தெரிவித்தனர். அதனால், பேரூராட்சி தரப்பில் குடிநீர் தர பரிசோதனை இரண்டு முறை நடைபெற்றது.
அதன் முடிவில், குடிநீரில் காரத்தன்மையும் அமிலத்தன்மையும் அதிகமாக உள்ளதென ஆய்வில் தெரிய வந்தது. இதுதவிர, குடிநீரில் சுவை இல்லை என மக்கள் கருத்து தெரிவித்து வந்தனர். எனவே குடிநீர் வடிகால் வாரியம் 2வது திட்டத்தின் கீழ், 36 பொதுக் குழாய்களில் நாள்தோறும் இரண்டு வேளையும், மூன்று மணி நேரம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக் கொண்ட ராஜா, ''குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக, அவிநாசி பேரூராட்சிக்கு வழங்கப்படும் குடிநீரில் டி.டி.எஸ்.ஸின் அளவுகோல் 70 சதவீதத்துக்கு மேல் இருக்கும் பட்சத்தில் உடனடியாக இரண்டாம் குடிநீர் திட்டத்தை பேரூராட்சி பகுதியில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீண்டும் ஒருமுறை தண்ணீரின் தரத்தை பரிசோதனை செய்ய வேண்டும். இது குறித்து, குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளருக்கு அறிவுறுத்தப்படும்,'' என்றார்.

