ADDED : டிச 13, 2024 10:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்; கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மையத்தடுப்பு அமைக்கும் பணி நடந்து வருகிறது. பொங்கலுாரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்படுகிறது.
விற்பனை கூடத்தின் எதிரில் வழியை அடைத்து மையத்தடுப்பு அமைத்தால் அங்கு செல்லும் வாகனங்கள் கி.மீ., கணக்கில் சுற்றிச்செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும்.
'விற்பனைக் கூடத்திற்குச் செல்லும் வழியை அடைக்கக்கூடாது. அங்கு மையத்தடுப்பு அமைப்பதை தடுக்க வேண்டும்'' என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

