ADDED : ஆக 21, 2025 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கலெக்டர், மேயர் மற்றும் கமிஷனருக்கு, நல்லுார் நுகர்வோர் நல மன்ற தலைவர் சண்முகசுந்தரம் அனுப்பிய மனு:
ஒரு முறை பயன்படுத்தும் பாலிதீன் கவர்களுக்கு அரசு தடை விதித்துள்ளது.திருப்பூரில் பெரும்பாலான கடைகளில் இவற்றின் பயன்பாடு அதிகளவில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் கண்காணிப்பின் கீழ், மாநகராட்சி நிர்வாகம் இது குறித்து ஆய்வு நடத்தி இதை இருப்பு வைத்திருப்போர் மற்றும் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக இதை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலிதீன் பொருட்களை தடை செய்யாமல், குப்பையில்லாத நகரம் என்ற வாதம் எந்த நாளும் எடுபடாது. மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் இணைந்து இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.