/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தரமில்லாத பணி; பொதுமக்கள் புகார்
/
தரமில்லாத பணி; பொதுமக்கள் புகார்
ADDED : பிப் 10, 2025 07:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம் : திருப்பூர் மாநகராட்சி, முதலாவது மண்டலத்திற்குட்பட்ட 24வது வார்டு சாமுண்டிபுரம் இரண்டாவது வீதியில் சாக்கடை கால்வாய் கட்ட மாநகராட்சி சார்பில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணி நடைபெற்று வருகிறது.
கால்வாயின் பக்க சுவர் கட்டும் பணி நடைபெற்றது. அதற்கான கான்கிரீட் கலவையில் அரை இன்ச் ஜல்லிக்கு பதிலாக ஒன்றரை இன்ச் ஜல்லி பயன்படுத்தி, போதிய சிமென்ட் கலவையின்றி தரமின்றி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பா.ஜ.,வினர் மாநகராட்சி அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர். அதிகாரிகள் பணியை ஆய்வு மேற்கொண்டனர். பின், பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.

