/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செயல்படாத புறக்காவல் நிலையம்: காங்கயத்தில் பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறி
/
செயல்படாத புறக்காவல் நிலையம்: காங்கயத்தில் பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறி
செயல்படாத புறக்காவல் நிலையம்: காங்கயத்தில் பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறி
செயல்படாத புறக்காவல் நிலையம்: காங்கயத்தில் பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறி
ADDED : நவ 07, 2025 12:16 AM

காங்கயம்: காங்கயம் பஸ் ஸ்டாண்டில் கடந்த சில மாதங்களாக புறக்காவல் நிலையம் முறையாக செயல்படுவதில்லை. பெரும்பாலான நேரம் பூட்டியே இருக்கிறது. தொடர்ந்து, மக்கள் பார்வைக்கும் தென்படும் வகையில் இல்லாமல், வளாகத்தின் ஒதுக்குப்புறமாக, இருக்கும் இடம் தெரியாத வகையிலான இடத்தில் அமைத்துள்ளனர்.
பஸ் ஸ்டாண்டில் நிற்கும் பயணிகளிடம் 'அட்ராசிட்டி' செய்யும் குடிமகன்கள், பள்ளி மாணவ, மாணவியரிடம் கிண்டல்களில் ஈடுபடும் வாலிபர்கள் என பாதுகாப்பற்ற நிலை தொடர்கிறது. பிக்பாக்கெட் போன்ற குற்ற சம்பவங்கள் நடக்கிறது. இதுகுறித்து பயணிகள் புகார் கொடுக்க முடிவதில்லை. இதனால், பாதிக்கப்பட்டும், பேசாமல் செல்லும் நிலையே உள்ளது.
'சிசிடிவி' அறை மூடல் நகராட்சி சார்பில், வளாகத்தில் 'சிசிடிவி' கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. அவையும் பெரும்பாலும் மூடப்பட்டே இருக்கிறது. தொடர்ந்து, வளாகம் முழுதும் சுகாதார சீர்கேடாக உள்ளது. காங்கயம் புறநகர் பஸ் ஸ்டாண்ட் மற்றும் நகர பஸ் ஸ்டாண்ட் ஆகியவை அருகருகே உள்ளன. பயணிகள் காத்திருப்பதற்காக அமைக்கப்பட்ட இருக்கைகளை போதை ஆசாமிகள் ஆக்கிரமித்து, துாங்கும் இடமாக மாற்றி விட்டனர். பயணிகள் கால்கடுக்க நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
போதை பொருள் தாராளம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் சத்தம் இல்லாமல் போதை பொருட்களையும் புழக்கத்தில் விட்டுள்ளனர். கஞ்சா, குட்கா போன்றவற்றை மறைமுகமாக 'சப்ளை' செய்கின்றனர். ஒருபுறம் மது, மற்றொரு புறம் இதுபோன்ற போதை ஆசாமிகள், முரட்டு தனமாக மோதி கொள்கின்றனர். பெண்களை கிண்டல் செய்வது போன்றவை தொடர்கதையாக உள்ளது.
குற்ற சம்பவங்கள் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள உயர்கோபுர மின் விளக்கு அவ்வப்போது எரிவதில்லை. அந்த நேரங்களில் குற்ற சம்பவம் நடக்கிறது. புறக்காவல் நிலையம் என்பது பெயரளவில் இருந்து வருவதால், சமீபத்தில் கூட பஸ் ஸ்டாண்ட் வளாகம், அதையொட்டி உள்ள பகுதியில் கடை பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடந்துள்ளது. எனவே, புறக்காவல் நிலையம் செயல்படும் வகையில், செயல்பட எஸ்.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும்.

