/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிலைத்திருக்காத சப் கலெக்டர்கள்; ஆமை வேகத்தில் கோப்புகள் நகர்வு
/
நிலைத்திருக்காத சப் கலெக்டர்கள்; ஆமை வேகத்தில் கோப்புகள் நகர்வு
நிலைத்திருக்காத சப் கலெக்டர்கள்; ஆமை வேகத்தில் கோப்புகள் நகர்வு
நிலைத்திருக்காத சப் கலெக்டர்கள்; ஆமை வேகத்தில் கோப்புகள் நகர்வு
ADDED : அக் 04, 2024 12:20 AM
திருப்பூர் : திருப்பூர் வருவாய் கோட்டத்துக்கு, திறமையான அதிகாரியை சப்-கலெக்டராக நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி ஆகிய ஐந்து தாலுகாக்களை உள்ளடக்கி திருப்பூர் வருவாய் கோட்டம் செயல் படுகிறது.
அதிக தாலுகாக்களை உள்ளடக்கியதாகவும், பரப்பளவிலும் மாவட்டத்தின் மிகப்பெரிய வருவாய் கோட்டமாக உள்ளது. குறிப்பாக, திருப்பூர் மாநகராட்சியின் 60 வார்டுகளும் திருப்பூர் கோட்டத்தின் கீழ் தான் வருகிறது.
மிக முக்கியமான திருப்பூர் கோட்டத்துக்கு, நியமிக்கப்படும் சப்-கலெக்டர்களை குறுகிய காலத்திலேயே பணியிட மாற்றம் செய்வது பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த, 2023 பிப்., மாதம், சப்-கலெக்டராக நியமிக்கப்பட்ட சவுமியா, ஒன்றரை ஆண்டுகளிலேயே, இடம் மாறுதலாகி சென்று விட்டார்.
அவருக்கு பதில் திருப்பூருக்கு இன்னும் சப்-கலெக்டர் நியமிக்கப் படவில்லை. மாவட்ட வழங்கல் அலுவலரான ரவிச்சந்திரனே திருப்பூர் கோட்டத்துக்கு பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வழக்கமான வழங்கல் பணிகளுக்கு மத்தியில், ஐந்து தாலுகாவை உள்ளடக்கிய திருப்பூர் கோட்ட வருவாய் பணிகளையும் கவனிப்பது, பொறுப்பு அதிகாரிக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது.
கடந்த செப்., மாதம், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை. பல்வேறு மேல்முறையீட்டு மனுக்கள், வருவாய் துறை சார்ந்த கோப்புக்களின் நகர்வு மந்தமாகியுள்ளது.
இதனால், திருப்பூர் வருவாய் கோட்ட அலுவலகத்துக்கு உடனடியாக சப் கலெக்டரை நியமிக்கவேண்டும் என்கிற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.