/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவை, ஈரோடு, சேலம் செல்ல 'இடைநில்லா பஸ்' அவசியம்
/
கோவை, ஈரோடு, சேலம் செல்ல 'இடைநில்லா பஸ்' அவசியம்
ADDED : ஏப் 25, 2025 11:45 PM
திருப்பூர்: திருப்பூரில் இருந்து கோவை, ஈரோடு, சேலத்துக்கு அதிகளவில் பயணிகள் பயணிக்கும் நிலையில், பிற மண்டலங்களை போல், திருப்பூரில் இருந்தும் 'இடைநில்லா பஸ்'களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
பொது போக்குவரத்தில் பயணிப்பவர்கள் பயண நேரம் மிச்சமானால் பரவாயில்லை என எதிர்பார்க்கின்றனர். அவ்வகையில், திருச்சி, கும்பகோணம் மண்டலங்களில் 'இடைநில்லா பஸ்' எனும் பெயரில் இயக்கப்படுகிறது. இப்பஸ்களின் பயண நேரம் மற்றும் துாரம், கட்டணம் உள்ளிட்ட விபரங்கள் பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் பஸ் ஸ்டாண்டில் விளம்பரப்படுத்தி உள்ளனர்.
அதன்படி, திருப்பூரில் இருந்து ஈரோடு, கோவை மற்றும் சேலத்துக்கு ஐந்து நிமிடத்துக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. அதிகாலை 4:00 மணிக்கு துவங்கும் பஸ் இயக்கம், நள்ளிரவு, 12:15 வரை உள்ளது. இப்பகுதிகளுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து பஸ்கள் புறப்பட்டு செல்வதால், இருக்கைகள் எல்லா நேரங்களிலும் நிறைவதில்லை. காலை, மாலை 'பீக்ஹவர்ஸில்' மட்டுமே, 45 முதல், 55 இருக்கை நிரம்புகிறது. மற்ற நேரங்களில், 30 இருக்கைகளே நிரம்புகிறது. கலெக் ஷனும் குறைகிறது. எனவே, பயணிகள் வசதிக்காக கூட்டம் அதிகரிக்கும் நேரங்களில், இடைநில்லா பஸ்களை திருப்பூரில் இருந்து கோவை, ஈரோடு, சேலத்துக்கு இயக்கலாம். இதனால், விரைவாக சென்று சேர வேண்டுமென எதிர்பார்க்கும் பயணிகள் பயன் பெற முடியும். போக்குவரத்து கழக வருவாயும் அதிகரிக்கும்.

