/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வடக்கு ரோட்டரியின் 'வளர்சக்தி' திட்ட விழா
/
வடக்கு ரோட்டரியின் 'வளர்சக்தி' திட்ட விழா
ADDED : ஆக 08, 2025 11:49 PM
திருப்பூர்:
திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில், கடந்த 2011 முதல், 'வளர் சக்தி' என்கிற பெயரில், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த மதிய உணவு வழங்கி வருகிறது.
பொங்கலுார், இ.வடுகபாளையம், கொடுவாய் ஆரம்ப சுகாதார மையங்களுக்கு, செவ்வாய் கிழமை தோறும் பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு, மதிய உணவு வழங்கப்பட்டுவருகிறது. 725 வது 'வளர் சக்தி' வார விழா மற்றும் தாய்ப்பால் வார விழா, பொங்கலுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. வடக்கு ரோட்டரி தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார்.
திருப்பூர் செலிப்ரேஷன் ரோட்டரி தலைவர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். செயலாளர்கள் அம்பிரத்தினம், சுரேஷ்குமார் வரவேற்றனர். பொருளாளர்கள் குபேந்திரன், சிவக்குமார் ஆகியோர் நன்றி கூறினர். வட்டார மருத்துவ அதிகாரி சுந்தரவேல் மற்றும் மருத்துவர்கள் பேசினர். சதுர்வேல் சிட்பண்ட்ஸ் சார்பில் சிறப்பு உணவுவழங்கப்பட்டது.