/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மயானத்தையும் விட்டு வைக்கவில்லை! பொதுமக்கள் கொந்தளிப்பு
/
மயானத்தையும் விட்டு வைக்கவில்லை! பொதுமக்கள் கொந்தளிப்பு
மயானத்தையும் விட்டு வைக்கவில்லை! பொதுமக்கள் கொந்தளிப்பு
மயானத்தையும் விட்டு வைக்கவில்லை! பொதுமக்கள் கொந்தளிப்பு
ADDED : நவ 25, 2024 11:07 PM

திருப்பூர்; திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில், உத்தமபாளையம் பகுதி மக்கள், வாக்காளர் அடையாள அட்டையுடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இது குறித்து, அப்பகுதியினர் கூறியதாவது:
காங்கயம் தாலுகா, உத்தமபாளையம் கிராமம், மீனாட்சி புரத்தில் மூன்று சமுதாய மக்கள் பயன்படுத்தும் மயானம் உள்ளது.
பொதுப்பணித்துறை புறம்போக்கு என்கிற வகைப்பாட்டில் உள்ள மயான பூமியை, தனியார் ஆக்கிரமித்து, கம்பிவேலி அமைத்துள்ளார். அங்கு எங்கள் முன்னோரை அடக்கம் செய்திருந்த இடங்களை, தடம் தெரியாதவாறு நிரப்பிவிட்டனர்.
இதுதொடர்பாக, கடந்த ஆறு மாதங்களாக கலெக்டர், போலீசார் உள்பட சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளிடமும் மனு அளித்துள்ளோம். உரிய விசாரணை செய்து, ஆக்கிரமிப்பு இருப்பின் அகற்ற ஆக., மாதம் கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால், இன்னும், அகற்றவில்லை.
முன்னோர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வழிபாடு செய்ய முடியாமலும், இறந்தவர்களை அடக்கம் செய்ய இடமின்றி தவிக்கிறோம்.
எங்களுக்கு வாக்காளர் அட்டை, ஓட்டுரிமை எதற்கு. வாக்காளர் அட்டையை ஒப்படைக்கிறோம். கலெக்டர் உத்தரவுப்படி, அளவீடு செய்து, மயான பூமியை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டுத்தரவேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

