/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சம்பளம் கொடுக்கவில்லை? மாநகராட்சி பள்ளிகளில் துாய்மை பணி பாதிப்பு
/
சம்பளம் கொடுக்கவில்லை? மாநகராட்சி பள்ளிகளில் துாய்மை பணி பாதிப்பு
சம்பளம் கொடுக்கவில்லை? மாநகராட்சி பள்ளிகளில் துாய்மை பணி பாதிப்பு
சம்பளம் கொடுக்கவில்லை? மாநகராட்சி பள்ளிகளில் துாய்மை பணி பாதிப்பு
ADDED : அக் 23, 2024 06:33 AM
திருப்பூர் மாநகராட்சி, பகுதியில் உள்ள துவக்க, நடுநிலை மற்றும் உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் துாய்மை பணியை மேற்கொள்ள மாநகராட்சி சார்பில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஒருவர் உள்பட நான்கு பேர் வரை நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, மாதம் 4 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது.
இதனால், சில துாய்மை பணியாளர் வேலைக்கு வராமல் உள்ளனர். பள்ளிகளில் துாய்மை பணி பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், வேலையே வேண்டாம் என்றும் சிலர் கூறுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகளின் இந்த மெத்தன போக்கால், துாய்மை பணி பாதிக்கப்பட்டு வருவதாக பள்ளி ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்.
அதேபோல், பள்ளியில் காலை உணவு திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாநகராட்சி சார்பில், மாதம் ஆயிரத்து 500 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கும், 2 மாத சம்பளம் வழங்கப்படாததால், அவர்களும் புலம்பி வருகின்றனர்.