/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகர ரோடுகளில் ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு :ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ்
/
நகர ரோடுகளில் ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு :ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ்
நகர ரோடுகளில் ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு :ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ்
நகர ரோடுகளில் ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு :ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ்
ADDED : பிப் 16, 2024 11:38 PM
உடுமலை:நகரின் முக்கிய ரோடுகளிலுள்ள, ஆக்கிரமிப்புகள், வரும், 23ம் தேதி அகற்றப்படும் என நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டம் சார்பில், அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உடுமலை உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறையின் கீழ், நகரிலுள்ள, ராஜேந்திரா ரோடு, தளி ரோடு, பை - பாஸ் ரோடு உள்ளிட்ட முக்கிய ரோடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த ரோடுகளில், குறிப்பிட்ட இடைவெளியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டாலும், மீண்டும், தற்காலிக ஆக்கிரமிப்புகளை ஏற்படுத்தி, போக்குவரத்துக்கு இடையூறு செய்கின்றனர்.
குறிப்பாக, தினசரி சந்தை, ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ள ராஜேந்திரா ரோட்டில் தற்காலிக ஆக்கிரமிப்புகளால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இந்த ரோட்டின் தொடர்ச்சியாக, உழவர் சந்தை பகுதியிலும் அதிக ஆக்கிரமிப்பு உள்ளது.
இதனால், வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதுடன், போக்குவரத்து நெரிசலால் விபத்துகளும் ஏற்படுகிறது. இது குறித்து எழுந்த தொடர் புகார் அடிப்படையில், நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அவ்வகையில், வரும், 23ம் தேதி நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி சார்பில், ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், உடுமலை - சின்னாறு ரோட்டில், வாளவாடி சந்திப்பு வரையிலும், ராஜேந்திரா ரோட்டில், தினசரி சந்தை முதல் மேம்பாலம் சந்திப்பு வரை, பழைய பஸ் ஸ்டாண்ட் பை - பாஸ் ரோட்டில், பஸ் ஸ்டாண்ட் ரவுண்டனா வரை, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது.
அப்பகுதிகளில், அரசு நிலப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள், தாங்களாகவே முன்வந்து, வரும் 22ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும்.
தவறினால், அரசுக்கு சொந்தமான இடத்திலுள்ள ஆக்கிரமிப்புகள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சியால், முழுவதுமாக அகற்றப்படும். அப்போது ஏற்படும் இழப்புகளுக்கு எந்த அரசுத்துறையினரும் பொறுப்பேற்க மாட்டார்கள்.
மேலும், ஆக்கிரமிப்பு அகற்ற ஏற்படும் செலவினங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீசும் வினியோகிக்கப்பட்டு வருகிறது.