/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாட்டிங் உரிமையாளர் சங்கம் இன்று முதல் வேலை நிறுத்தம்
/
நாட்டிங் உரிமையாளர் சங்கம் இன்று முதல் வேலை நிறுத்தம்
நாட்டிங் உரிமையாளர் சங்கம் இன்று முதல் வேலை நிறுத்தம்
நாட்டிங் உரிமையாளர் சங்கம் இன்று முதல் வேலை நிறுத்தம்
ADDED : ஜூலை 29, 2025 11:51 PM
அவிநாசி; தெக்கலுாரில், அவிநாசி நாட்டிங் உரிமையாளர் சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.
துணைத் தலைவர் கதிரேசன், உதவி துணைத் தலைவர் மருதாசலம், செயலாளர் யோகேஸ்வரன், துணை செயலாளர் சந்தோஷ், உதவி துணை செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் கார்த்திக், துணை பொருளாளர் சரவணகுமார், உதவி பொருளாளர் சிவசங்கர், ஐ.டி. பிரிவு ரமேஷ், ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன், மகேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
பொதுக்குழு கூட்டத்தில், கடந்த 22ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானத்தின் படி, இன்று முதல் (30ம் தேதி) கோரிக்கை நிறைவேறும் வரை வேலைநிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதனால், 30 ஆயிரம் தறிகளுக்கு மேல் இயங்காது.
நேரடியாகவும், மறைமுகமாகவும் 20,000 தொழிலாளர்கள் வேலை இழப்பர். சொந்த ஜவுளி உற்பத்தியாளர்கள், சைசிங், ஓ.இ., மில், ஸ்பின்னிங் மில், டெக்ஸ்டைல்ஸ், டிரேடர்ஸ், என பல தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகும்.
அச்சுப் பிணைப்பு தொழில் நிறுத்தப்பட்டால் இதனை சார்ந்து இருக்கும் பிற தொழில்களும், அதனால் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவர்.
எனவே உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டுமென, நாட்டிங் உரிமையாளர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.