/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நொய்யல் கரை புதிய ரோடு இனி, 'தமிழ்ச் சாலை'
/
நொய்யல் கரை புதிய ரோடு இனி, 'தமிழ்ச் சாலை'
ADDED : ஜூன் 04, 2025 01:38 AM
திருப்பூர், ; நொய்யல் கரையில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரோடுக்கு, 'தமிழ்ச் சாலை' என பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் வளர்ச்சி மற்றும் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதியில் உள்ள ஒரு முக்கிய சாலைக்கு தமிழ்ச்சாலை எனப் பெயர் சூட்ட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அவ்வகையில், திருப்பூர் மாநகராட்சி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரோட்டுக்கு தமிழ்ச்சாலை என்ற பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், நொய்யல் கரை மேம்படுத்தி, இரண்டு புற கரைகளிலும் ரோடு அமைக்கப்படுகிறது. இதில், வளர்மதி பாலம் முதல் நொய்யல் ஆற்றின் தென்புறக் கரையில், ஜம்மனை ஓடையைக் கடந்து, நடராஜா தியேட்டர் பாலம் வரையில் புதிய ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரோட்டுக்கு 'தமிழ்ச்சாலை' என்ற பெயர் வைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பணி முழுமையாக நிறைவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் போது, தமிழ்ச்சாலை பெயர்ப் பலகை அமைக்கப்படும்.