/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நொய்யல் மீட்பு போராட்டம் இன்று உண்ணாவிரதம்
/
நொய்யல் மீட்பு போராட்டம் இன்று உண்ணாவிரதம்
ADDED : ஜூலை 13, 2025 12:36 AM
பல்லடம் : தமிழக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தம் மற்றும் நிர்வாகிகள் கூறியதாவது:
நொய்யல் நதி மாசடைந்ததன் காரணமாக, காலப்போக்கில், விவசாய நிலங்களும் மாயமாகின. தொழிற்சாலை கழிவுகள், மருத்துவக் கழிவுகள், உள்ளாட்சி அமைப்புகளின் குப்பைகள், கழிவுகள் உள்ளிட்ட அனைத்தும் நொய்யலில் கலக்கப்பட்டதன் விளைவு, நொய்யல் நதி கடுமையாக மாசடைந்துள்ளது.
நொய்யல் நதியை ஒட்டியுள்ள விவசாயம் கால்நடை தொழில் அழிந்து வருகிறது. நொய்யல் நீர், பயன்படுத்துவதற்கு அற்ற தண்ணீராக மாறி, புற்றுநோய் அபாயமும் ஏற்பட்டுள்ளது. நதியை காப்பாற்ற வேண்டும் என, தமிழக நொய்யல் பாதுகாப்பு விவசாயிகள் சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது.
நொய்யலை காக்கும் நோக்கத்தில், கோவை, திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், மாசுக்கட்டுப்பாடு வாரியம், உள்ளாட்சி அமைப்புகள் என, தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் அளித்துள்ளோம். நொய்யலை மீட்க வலியுறுத்தி, இன்று மங்கலத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.