/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தன்னலமற்ற சேவையை வளர்க்கும் என்.எஸ்.எஸ்.,
/
தன்னலமற்ற சேவையை வளர்க்கும் என்.எஸ்.எஸ்.,
ADDED : டிச 18, 2024 05:24 AM
அவிநாசி,: ளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல் படி, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, என்.எஸ்.எஸ்., அலகு-2 சார்பில், தத்தெடுப்பு கிராமமான அவிநாசி, கருமாபாளையம் கிராமத்தில் சிறப்பு முகாம் துவங்கியது.என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், முன்னிலை வகித்தார்.
கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், தலைமை வகித்தார். கருமாபாளையம் ஊராட்சி துணைத் தலைவர் சண்முகசுந்தரம், முகாமை துவக்கி வைத்தார்.பாரதியார் பல்கலை என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், ''இந்தியாவில், அதிகப்படியான உறுப்பினர்களை கொண்ட ஒரே இயக்கம், என்.எஸ்.எஸ்., எவ்வித எதிர்பார்ப்புமின்றி, அர்ப்பணிப்புடன் தன்னலமற்ற சேவையை செய்பவர்கள் என்.எஸ்.எஸ்., திட்ட மாணவர்கள்.
இத்தகைய முகாம் வாயிலாக ஒற்றுமை, சகோதரத்துவம், விட்டுக் கொடுக்கும் பண்பு மற்றும் தனித்தன்மை ஆகிய பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்'' என்றார். மது கார்த்திக் நன்றி கூறினார்.தொடர்ந்து, என்.எஸ்.எஸ்., மாணவர்கள், கருமாபாளையம் துவக்கப்பள்ளி முன்பிருந்த களைச்செடிகளை அகற்றினர்.