/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நான்கு பாடத்தில் தேர்ச்சி பெற்றவர் எண்ணிக்கை உயர்வு
/
நான்கு பாடத்தில் தேர்ச்சி பெற்றவர் எண்ணிக்கை உயர்வு
நான்கு பாடத்தில் தேர்ச்சி பெற்றவர் எண்ணிக்கை உயர்வு
நான்கு பாடத்தில் தேர்ச்சி பெற்றவர் எண்ணிக்கை உயர்வு
ADDED : மே 18, 2025 12:20 AM
திருப்பூர், : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் ஆங்கிலம் தவிர, மற்ற நான்கு பாடங்களில் தேர்ச்சி பெற்றவர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், கடந்தாண்டு தமிழில், 419, ஆங்கிலத்தில், 78, கணிதத்தில், 875, அறிவியலில், 1,143, சமூக அறிவியலில், 1,257 பேர் என, 3,772 பேர் தேர்ச்சி பெறவில்லை. நடப்பாண்டு, தமிழில், 320, ஆங்கிலத்தில், 55, கணிதத்தில், 750, அறிவியலில், 631, சமூக அறிவியலில், 549 பேர் என, 2,305 பேர் தேர்ச்சி பெறவில்லை.
நடப்பாண்டு, தமிழில், 99 பேரும், ஆங்கிலத்தில், 23 பேரும், கணிதத்தில், 125 பேரும், அறிவியலில், 631 பேரும், சமூகஅறிவியலில், 549 பேரும் என, 1,467 பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்தாண்டு தமிழில், 329, ஆங்கிலத்தில், 66, கணிதத்தில், 558, அறிவியலில், 789, சமூக அறிவியலில், 803 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. மாணவியரை பொறுத்த வரை தமிழில், 90 பேரும், ஆங்கிலத்தில், 12 பேரும், கணிதத்தில், 317 பேரும், அறிவியலில், 354 பேரும், சமூக அறிவியலில், 454 பேரும் தேர்ச்சி பெறவில்லை.
நடப்பாண்டு தமிழில், 238, ஆங்கிலத்தில், 39, கணிதத்தில், 443, அறிவியலில், 404, சமூகஅறிவியலில், 375 மாணவர்களும், தமிழில், 82, ஆங்கிலத்தில், 16, கணிதத்தில், 307, அறிவியலில், 227, சமூக அறிவியலில், 174 மாணவியரும் தேர்ச்சி பெறவில்லை. தமிழில், 91, ஆங்கிலத்தில், 27, கணிதத்தில், 115, அறிவியலில், 385, சமூக அறிவியலில், 428 என, 1,046 மாணவர்கள் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியரை பொறுத்த வரை, தமிழில், எட்டு பேர் கூடுதலாக தேர்ச்சியடைந்துள்ளனர்.
ஆங்கிலத்தில், 12 ஆக இருந்த தேர்ச்சி பெறாத மாணவியர் எண்ணிக்கை, 16 ஆக உயர்ந்துள்ளது. கணிதத்தில், 10 பேரும், அறிவியலில், 127 பேரும், சமூக அறிவியலில், 280 பேரும் என, 429 பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.