/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆசிரியர்களுக்கு 3 மையங்களில் எண்ணும் எழுத்தும் பயிற்சி
/
ஆசிரியர்களுக்கு 3 மையங்களில் எண்ணும் எழுத்தும் பயிற்சி
ஆசிரியர்களுக்கு 3 மையங்களில் எண்ணும் எழுத்தும் பயிற்சி
ஆசிரியர்களுக்கு 3 மையங்களில் எண்ணும் எழுத்தும் பயிற்சி
ADDED : ஜன 07, 2025 11:45 PM
உடுமலை ;மூன்றாம் பருவத்துக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி உடுமலையில் நடக்கிறது.
பள்ளி மாணவர்கள் கற்றலை மேம்படுத்தும் வகையில், கல்வித்துறை சார்பில் எண்ணும் எழுத்தும் பயிற்சி திட்டம் துவக்கப்பட்டுள்ளது. தற்போது, அரசு துவக்கம் முதல் மேல்நிலை வரை, அரையாண்டு விடுமுறை முடிந்து மூன்றாம் பருவத்துக்கான வகுப்புகள் நடக்கின்றன. அரசுப்பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் நடைமுறையில் வகுப்புகள் நடக்கிறது.
ஒவ்வொரு பருவம் துவங்கும் போதும், ஆசிரியர்களுக்கு அதற்கேற்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது மூன்றாம் பருவத்துக்கான பயிற்சி, நேற்றுமுன்தினம் முதல் துவங்கியுள்ளது.
உடுமலை வட்டாரத்தில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கு, மூன்று மையங்களில் பயிற்சி நடக்கிறது.
கச்சேரி வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளி, போடிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பழனியாண்டவர் மில்ஸ் நகராட்சி துவக்கப்பள்ளி உள்ளிட்ட மையங்களில் நடக்கிறது. பயிற்சி நாளை (9ம் தேதி) நிறைவு பெறுகிறது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட ஆசிரியர் பயிற்றுனர்கள் பயிற்சியை ஒருங்கிணைத்தனர்.
இதன் வாயிலாக, மாணவர்கள் கற்றல் திறனை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.