ADDED : நவ 12, 2026 10:09 PM
திருப்பூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 6,500 செவிலியர்களையும் காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களையும் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி.,) வாயிலாக நிரந்தரப் பணியில் அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ‘டீன்’ அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட செயலாளர் கிளிபோர்டு எபி தலைமை வகித்தார். மாநில இணைச் செயலாளர் பெஜக்சின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். புதிதாக உருவாக்கப்படும் செவிலியர் பணியிடங்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
