/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சத்துணவு ஊழியர் சங்க முப்பெரும் விழா
/
சத்துணவு ஊழியர் சங்க முப்பெரும் விழா
ADDED : ஏப் 30, 2025 12:49 AM

அவிநாசி,; சத்துணவு ஊழியர் சங்க, 40வது ஆண்டு விழா, தொகுப்பூதிய ஒழிப்பு மாநாடு, 15வது ஒன்றிய மாநாடு ஆகிய முப்பெரும் விழா, நடைபெற்றது.
விழாவுக்கு, ஒன்றிய தலைவர் ஜெயஸ்ரீ தலைமை வகித்தார். ஒன்றிய துணைத் தலைவர் நளினி வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் விஜயலட்சுமி துவக்க உரையாற்றினார்.  செயலாளர் சுமதி ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் உமாமகேஸ்வரி வரவு - செலவு அறிக்கை வாசித்தார்.
சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் பழனிசாமி, மாவட்ட கன்வீனர் முருகேசன், மாவட்ட இணை செயலாளர் சாந்தாமணி, மாவட்ட தலைவர் ஜெயந்தி சிறப்புரை ஆற்றினர். இணைச் செயலாளர் பரிமளா நன்றி கூறினார். ஒன்றிய இணைச் செயலாளர் சுதா, துணைத் தலைவர் செல்வி, தீபா, செயற்குழு உறுப்பினர் ஜோதி ஒருங்கிணைத்தனர்.

