ADDED : டிச 23, 2024 11:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொகுப்பூதிய அடிப்படையில் சத்துணவு திட்டத்தில் பணியாளர்களை நியமிப்பதை கைவிடக் கோரி அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைவர் ஜெயஸ்ரீ தலைமை தாங்கினார். ஒன்றிய துணைத் தலைவர் நளினி வரவேற்றார். ஒன்றிய செயலாளர் சுமதி உள்ளிட்ட பலர் பேசினர். சத்துணவு திட்டத்தில் காலியாக உள்ள அமைப்பாளர், சமையலர்,உதவியாளர் பணியிடங்களை சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட துணை தலைவர் விஜயலட்சுமி நிறைவுரை நிகழ்த்தினார். ஒன்றிய பொருளாளர் உமாமகேஸ்வரி நன்றி கூறினார்.