/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சத்துணவு - அங்கன்வாடி பணியாளர் மடிப்பிச்சை ஏந்தும் போராட்டம்
/
சத்துணவு - அங்கன்வாடி பணியாளர் மடிப்பிச்சை ஏந்தும் போராட்டம்
சத்துணவு - அங்கன்வாடி பணியாளர் மடிப்பிச்சை ஏந்தும் போராட்டம்
சத்துணவு - அங்கன்வாடி பணியாளர் மடிப்பிச்சை ஏந்தும் போராட்டம்
ADDED : மே 09, 2025 11:38 PM
திருப்பூர்,: சட்டரீதியான ஓய்வூதியம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று மடிப்பிச்சை ஏந்தும் போராட்டம் நடத்தினர்.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தபடி, 6,750 ரூபாய் குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டும். சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, 2017 அக்., 1ம் தேதி முதல் பணப்பலன் கிடைக்கும் வகையில், ஓய்வூதியத்தை திருத்தி அமைக்க வேண்டும். அதன்படி, ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று போராட்டம் நடந்தது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு. மாவட்ட தலைவர் முத்தமிழ்ராஜ் தலைமை வகித்தார். மடத்துக்குளம் கிளை தலைவர் மின்னல்கொடி வரவேற்றார். மாவட்ட தலைவர் பழனிசாமி போராட்டத்தை துவக்கி வைத்தார். செயலாளர் பரிபூரணம் கோரிக்கையை விளக்கி பேசினார்.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் ஞானசேகரன், பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கரன், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் விளக்கி பேசினர்.
கோரிக்கையை வலியுறுத்தி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மடிப்பிச்சை ஏந்தும் போராட்டம் நடத்தி, தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.