/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட கைப்பந்து போட்டிக்கு என்.வி. மெட்ரிக் பள்ளி தகுதி
/
மாவட்ட கைப்பந்து போட்டிக்கு என்.வி. மெட்ரிக் பள்ளி தகுதி
மாவட்ட கைப்பந்து போட்டிக்கு என்.வி. மெட்ரிக் பள்ளி தகுதி
மாவட்ட கைப்பந்து போட்டிக்கு என்.வி. மெட்ரிக் பள்ளி தகுதி
ADDED : ஆக 08, 2025 07:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:
மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிக்கு, தகுதி பெற்ற மாணவர்களுக்கு என்.வி. மெட்ரிக் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.
உடுமலை குறுமைய அளவிலான கைப்பந்து போட்டி, எஸ்.கே.பி. மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது.
இப்போட்டியில், மாணவர்களுக்கான 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் பெதப்பம்பட்டி என்.வி. மெட்ரிக் பள்ளி அணி வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்ற அணி மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
மேலும், 19 வயதினருக்கான இருபிரிவுகளிலும் மாணவர்கள் இரண்டாமிடத்தில் வெற்றி பெற்றுள்ளனர். மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் பாராட்டினர்.