/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'போக்சோ' வழக்கில் தொடர்பு நபர் கோட்டை விட்ட ஒடிசா போலீசார்
/
'போக்சோ' வழக்கில் தொடர்பு நபர் கோட்டை விட்ட ஒடிசா போலீசார்
'போக்சோ' வழக்கில் தொடர்பு நபர் கோட்டை விட்ட ஒடிசா போலீசார்
'போக்சோ' வழக்கில் தொடர்பு நபர் கோட்டை விட்ட ஒடிசா போலீசார்
ADDED : மே 04, 2025 12:34 AM
திருப்பூர்: 'போக்சோ' வழக்கில் தொடர்புடைய வாலிபரை பிடித்த ஒடிசா போலீசார், ஊருக்கு அழைத்து செல்ல ஆயத்தமான போது வாலிபர் தப்பி சென்றார்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஹிரோனியா பாடி, 25. இவர் மீது 'போக்சோ' வழக்குபதிவு செய்து, அம்மாநிலத்தை சேர்ந்த போலீசார் தேடி வந்தனர். வாலிபர், திருப்பூர் வேலம்பாளையத்தில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்வது தெரிந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்வதற்காக, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த எஸ்.ஐ., ஸ்ரீமாறன் சிங் காந்தி தலைமையில் இரு போலீசார் திருப்பூருக்கு வந்தனர். பின், வேலம்பாளையம் போலீசார் உதவியுடன் வாலிபரை பிடித்தனர்.
இதையடுத்து, வடக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகே ஓட்டலில் அறையடுத்து தங்கிய போலீசார், அவரை ஊருக்கு அழைத்து செல்ல நடைமுறை பணியை மேற்கொண்டு வந்தனர். டிக்கெட் முன்பதிவு செய்ய திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றிருந்த நிலையில், பாதுகாப்புக்கு இருந்த பெண் போலீசாரை தள்ளி விட்டு விட்டு, வாலிபர் கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்று விட்டார். புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.