/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரயிலில் கஞ்சா கடத்தல்; ஒடிசா வாலிபர் கைது
/
ரயிலில் கஞ்சா கடத்தல்; ஒடிசா வாலிபர் கைது
ADDED : பிப் 07, 2025 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் மாநகர பகுதியில் கஞ்சா, குட்கா, போதை மாத்திரை புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கையை மாநகர போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து ரயில்களில் வரும் நபர்களை தனிப்படையினர் கண்காணித்து வருகின்றனர்.
திருப்பூருக்கு நேற்று சந்தேகப்படும் விதமாக ரயிலில் வந்த, ஒடிசாவை சேர்ந்த அனந்த பிபார், 19 என்பவரிடம் விசாரித்தனர். அவர் விற்பனைக்காக ரயிலில் கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. அவரை கைது செய்து, எட்டு கிலோ கஞ்சாவை திருப்பூர் வடக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.