/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒடிஷா வாலிபர் கொலை அதே மாநிலத்தின் மூவருக்கு 'கம்பி'
/
ஒடிஷா வாலிபர் கொலை அதே மாநிலத்தின் மூவருக்கு 'கம்பி'
ஒடிஷா வாலிபர் கொலை அதே மாநிலத்தின் மூவருக்கு 'கம்பி'
ஒடிஷா வாலிபர் கொலை அதே மாநிலத்தின் மூவருக்கு 'கம்பி'
ADDED : அக் 23, 2025 12:41 AM
திருப்பூர்: திருப்பூரில், ஒடிஷா வாலிபரை கட்டையால் தாக்கி கொன்ற, சிறுவன் உட்பட, மூவரை போலீசார் கைது செய்தனர்.
ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர் அனில்குமார் ஜனா, 18. திருப்பூர், வெங்கமேட்டில் தங்கி, சாய ஆலையில் வேலை செய்து வந்தார். அதே வளாகத்தில், மற்றொரு சாய ஆலையில் வேலை செய்யும் ஒடிஷாவை சேர்ந்த சிலருக்கும், இவருக்கும் முன்விரோதம் இருந்தது. தீபாவளியன்று அனில்குமார் ஜனா பட்டாசு வெடித்தார். மற்றொரு தரப்பை சேர்ந்த ஒடிஷா வாலிபர்கள், தாங்கள் வெடிக்கும் இடத்தில் பட்டாசு வெடிக்க கூடாது எனக் கூறி தகராறு செய்தனர்.
நேற்று முன்தினம், அவ்வழியாக நடந்து சென்ற அனில்குமார் ஜனாவை, அம்ரித், 19, அமன், 19 மற்றும், 17 வயது சிறுவன் ஆகியோர் கட்டையால் தாக்கி கொலை செய்தனர். நேற்று, மூவரையும் போலீசார் கைது செய்தனர்.