/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வகுப்பறையில் அதிகாரிகள்; சமையலறையில் குழந்தைகள்
/
வகுப்பறையில் அதிகாரிகள்; சமையலறையில் குழந்தைகள்
ADDED : ஆக 01, 2025 11:06 PM

திருப்பூர்; 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நேற்று, 15 வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்தது. முகாமை மேயர் தினேஷ்குமார் துவக்கி வைத்து, சான்றிதழ் வழங்கினார்.
மண்டல தலைவர் உமாமகேஸ்வரி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர். மாற்று திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று, 11, 12, 14 ஆகிய வார்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்.
மக்கள் கூட்டம் அதிகமாக வருவதால், மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான மனு கொடுக்க மாநகராட்சி நடு நிலைப்பள்ளியிலும், மற்ற துறைகளுக்கு மனு கொடுக்க பள்ளி எதிரே உள்ள கோவில் மண்டபத்திலும் ஏற்பாடு செய்திருந்தனர். பள்ளி வளாகத்தில் முகாம் நடத்தப்பட்டபோதும் பள்ளி வழக்கம் போல் செயல்பட்டது.
முகாமுக்காக, அங்கன்வாடி மைய வகுப்பறை மற்றும் யோகா வகுப்பறை ஆகியவற்றை அதிகாரிகள் எடுத்து கொண்டனர்.
இதனால், அங்கன்வாடிமைய குழந்தைகள் சமையல் அறையில் அமர்ந்து இருந்தனர். முகாம் குறித்து, ஸ்பீக்கரில் தொடர்ந்து சத்தம் வந்ததால், மாணவர்கள், ஆசிரியர்கள் அவதிப்பட்டனர்.

