/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மருத்துவ கல்லுாரி மருத்துவமனை உணவகத்தில் அலுவலர் ஆய்வு
/
மருத்துவ கல்லுாரி மருத்துவமனை உணவகத்தில் அலுவலர் ஆய்வு
மருத்துவ கல்லுாரி மருத்துவமனை உணவகத்தில் அலுவலர் ஆய்வு
மருத்துவ கல்லுாரி மருத்துவமனை உணவகத்தில் அலுவலர் ஆய்வு
ADDED : நவ 22, 2024 12:16 AM

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் செயல்படும் உணவகம் மற்றும் விடுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஸ்டாலின் பிரபு, ஆறுச்சாமி, சிரஞ்சீவி குழுவினர், மருத்துவமனையில் நோயாளிகள், செவிலியர்கள், பயிற்சி டாக்டர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக உள்ளதா என பரிசோதித்தனர். உற்பத்தி கூடங்களில், சுகாதாரமாக உணவு தயாரிக்கப்படுகிறதா; பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வுக்குப்பின், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:
திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை உணவுக்கூடத்தை மத்திய உணவு பாதுகாப்பு ஆணையம், முழுமையாக ஆய்வு செய்தது. உணவின் தரம், சுகாதாரம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, 2023ம் ஆண்டில், சுகாதாரமான உணவு வழங்கும் வளாகம் (ஈட் ரைட் கேம்பஸ்) என்ற சான்று வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கலெக்டர் உத்தரவுப்படி, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையின் மூன்று உணவுக்கூடங்களிலும் தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற நிறுவனங்களிடமிருந்து மட்டுமே, உணவு தயாரிப்பு மூலப்பொருட்களை கொள்முதல் செய்யவேண்டும். உணவுப்பொருள் மற்றும் உணவுப்பொருள் அல்லாத பொருட்களை தனித்தனியே இருப்புவைக்கவேண்டும்.
சமையல் கூடத்தின் அனைத்து பகுதிகளையும் சுகாதாரமாக பராமரிக்கவேண்டும். உணவு கையாளுபவர்கள் கட்டாயம் தலைக்கவசம் மற்றும் கையுறை, மேலங்கி அணியவேண்டும். உணவு தயாரிப்பில் ஈடுபடும் பணியாளர்களுக்கு, ஆறு மாதத்துக்கு ஒருமுறை, பரிசோதனை செய்து, தொற்று நோய்கள் ஏதுமில்லை என்கிற மருத்துவ சான்று பெற வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.