/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆட்சி மொழி சட்ட வாரம் விழிப்புணர்வு ஊர்வலம்
/
ஆட்சி மொழி சட்ட வாரம் விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : டிச 18, 2024 11:19 PM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் நேற்று துவங்கி, வரும், 27ம் தேதி வரை ஆட்சி மொழி சட்ட வாரம் கொண்டாடப்படுகிறது. முதல் நாளான நேற்று, கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்ட வார விழா விழிப்புணர்வு ஊர்வலத்தை, கலெக்டர் கிறிஸ்துராஜ் துவக்கி வைத்தார். கல்லுாரி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், தமிழ் அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்று, ஊர்வலமாக சென்றனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் துவங்கிய ஊர்வலம், தென்னம்பாளையம் வரை சென்று திரும்பியது.
இரண்டாவது நாளான இன்று, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், காலை, 10:00 மணி முதல், அரசு பணியாளர்களுக்கு கணினி தமிழ் ஒருங்குறி பயன்பாடு குறித்த பயிற்சி நாளை, தமிழில் குறிப்புகள் எழுதுவது குறித்த பயிற்சி நடைபெற உள்ளது. வரும், 23ம் தேதி, அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்கும், ஆட்சி மொழி குறித்த பட்டிமன்றம், 24ம் தேதி, தமிழில் பெயர் பலகை அமைப்பது குறித்து வணிக நிறுவனத்தினருக்கான கூட்டம், 26ம் தேதி, ஆட்சி மொழி திட்ட விளக்க கூட்டம் ஆகியன நடைபெறுகிறது.