/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தியேட்டர் கேன்டீனில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
/
தியேட்டர் கேன்டீனில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
ADDED : ஜன 14, 2025 11:48 PM

திருப்பூர்; திருப்பூர், அவிநாசி, பல்லடம் பகுதி தியேட்டர்களில் செயல்படும் கேன்டீன்களில் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம், குளிர் பானங்கள், தின்பண்டங்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:
தியேட்டர்களில் கேன்டீன் நடத்துவோர், முறையான உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட உணவுப்பொருட்களை வாங்கி விற்பனை செய்யும்போது, 'லேபிள்' விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதா, தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளனவா என பார்த்து வாங்க வேண்டும். கேன்டீனை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும்.
பப்ஸ், சமோசா, கட்லெட் போன்ற பேக்கரி பொருட்களை தேவைக்கு ஏற்ப வாங்கி, தகுந்த வெப்பநிலையில் வைத்து விற்பனை செய்ய வேண்டும்.
ஐஸ்கிரீம்களை பிரிட்ஜில் வைத்து விற்பனை செய்யவேண்டும். காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பணியாளர்கள் கையுறை, தலைகவசம் அணிந்திருக்க வேண்டும்.
தியேட்டர் கேண்டீன்களில் உணவுப்பொருட்களின் தரம் சார்ந்த புகார்களை, 94440 42322 என்கிற வாட்ஸ் அப் எண்ணில், பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.