/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கிடங்கான பிரதான ரோடுகள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
/
குப்பை கிடங்கான பிரதான ரோடுகள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
குப்பை கிடங்கான பிரதான ரோடுகள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
குப்பை கிடங்கான பிரதான ரோடுகள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : ஜன 16, 2025 05:56 AM
உடுமலை : உடுமலையில் பிரதான ரோடுகளின் ஓரத்தில், கட்டட கழிவு, பிளாஸ்டிக், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால், கடும் பாதிப்பு ஏற்படுகிறது.
உடுமலை - பொள்ளாச்சி ரோட்டில், நகர எல்லையை ஒட்டிய பகுதிகளில், இரு புறமும் பல கி.மீ., துாரத்துக்கு, கட்டட கழிவு, பிளாஸ்டிக், சுண்ணாம்பு, சிமென்ட் உள்ளிட்ட தொழிற்சாலை கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது.
இதனால், துர்நாற்றம் மற்றும் சுகாதாரகேடும் ஏற்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தீ வைப்பதால் புகை மூட்டமாக மாறி வருகிறது. கட்டட கழிவுகள், காற்றில் பறந்து வாகன ஓட்டுநர்களின் கண்களில் விழுகிறது.
உடுமலை நகரத்தில் துவங்கி, முக்கோணம் வரை, ஐந்து கி.மீ.,துாரத்துக்கு ரோட்டின் இரு புறமும் மலைபோல கழிவுகள் தேங்கியுள்ளன.
அதே போல், தாராபுரம் ரோட்டில், புற நகர பகுதிகளில் ரோட்டின் இரு புறமும், பிளாஸ்டிக் கழிவுகள், உடைந்த கண்ணாடி கழிவுகள், அருகிலுள்ள தொழிற்சாலையிலிருந்து, பஞ்சு மற்றும் அபாயகரமான கழிவுகள் கொட்டப்படுகிறது.
இரவு நேரங்களில் தீ வைப்பதோடு, வாகனங்கள் ஒதுங்க வழியில்லாத அளவிற்கு ரோடுகளிலேயே கொட்டப்படுகிறது.
தளி ரோட்டில், போடிபட்டியில் இருந்து, மூணாறு, திருமூர்த்திமலை செல்லும் ரோடுகளின் ஓரத்திலும், மழை நீர் ஓடைகளை ஆக்கிரமித்து கழிவுகள் கொட்டப்படுகிறது.
புறநகர் பகுதியில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் குப்பைக்கிடங்காக மாற்றப்படுவது குறித்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கண்டு கொள்வதில்லை.
எனவே, ரோட்டோரங்களில் கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும், குப்பை கொட்டும் வாகனங்களை பறிமுதல் செய்யவும், அதிகாரிகள் குழு அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.