/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிதிலமடைந்த கிராமத்திற்கு செல்லும் ரோடு கண்டுகொள்ளாத அதிகாரிகள்
/
சிதிலமடைந்த கிராமத்திற்கு செல்லும் ரோடு கண்டுகொள்ளாத அதிகாரிகள்
சிதிலமடைந்த கிராமத்திற்கு செல்லும் ரோடு கண்டுகொள்ளாத அதிகாரிகள்
சிதிலமடைந்த கிராமத்திற்கு செல்லும் ரோடு கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : மார் 23, 2025 10:03 PM

உடுமலை : உடுமலையிலிருந்து, எஸ்.வி., புரம், ஜீவா நகர் வழியாக கண்ணமநாயக்கனுார் செல்லும் ரோடு குண்டும், குழியுமாக காணப்படுவதால், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
உடுமலை நகருக்கு அருகிலுள்ள குடியிருப்புகள் மற்றும் கண்ணமநாயக்கனுார் கிராமத்திற்கு, எஸ்.வி., புரம் மற்றும் ஜீவா நகர் வழியாக செல்லும் ரோடு, 2.5 கி.மீ., நீளம் உடையதாகும்.
தினமும், பள்ளி, கல்லுாரிகளுக்கு வரும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள், விவசாயிகள் என நுாற்றுக்கணக்கானவர்கள் ரோட்டை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ரோடு அமைக்கப்பட்டு, பல ஆண்டுகளான நிலையில், தொடர்ந்து பராமரிக்காமலும், புதுப்பிக்கப்படாமலும் உள்ளதால், குண்டும், குழியுமாக மாறியுள்ளது. பல இடங்களில் ரோடு முற்றிலும் சேதமடைந்து, வெறும் ஜல்லிக்கற்கள், குழிகளாக காணப்படுகிறது.
இந்த ரோட்டில் அதிகளவு வளைவுகள், விவசாய நிலங்கள் உள்ளதால், பெரும்பாலான ரோடு, புதர் மூடியும், செடி, கொடிகள் முளைத்தும் காணப்படுகிறது. பிரதான போக்குவரத்து வழித்தடமாக உள்ள இந்த ரோட்டை, ஒன்றிய நிர்வாகம் புதுப்பிக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'கல்வி, மருத்துவம், விவசாய பொருட்களை கொண்டு செல்வதற்கு என, கிராம மக்களுக்கு பிரதான வழித்தடமாக உள்ளது. ஆனால், ரோடு முழுவதும் குண்டும், குழியுமாக மாறியும், மண் ரோடாக மாறி, பல இடங்களில் முள்செடிகள், மரங்கள் முளைத்தும் காணப்படுகிறது. பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் உள்ள இந்த ரோட்டை புதுப்பிக்க ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.