/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அதிகாரிகள் மெத்தனம் கழிப்பிடத்துக்கு பூட்டு
/
அதிகாரிகள் மெத்தனம் கழிப்பிடத்துக்கு பூட்டு
ADDED : ஜன 07, 2026 07:43 AM

அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகராட்சி, 1வது வார்டு, கூத்தம்பாளையத்தில் மாநகராட்சி சார்பில், கட்டப்பட்ட பொது கழிப்பிடத்தை, அப்பகுதியினர் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன் மர்ம நபர்கள் கழிப்பிடத்தில் தண்ணீருக்காக பொருத்தப்பட்டிருந்த குழாய், கழிப்பறையில் பயன்படுத்தி வந்த பக்கெட், மின் விளக்கு ஆகியவற்றை திருடி சென்றனர்.
கழிப்பறையில் தண்ணீர் பைப் மற்றும் பொருட்கள் திருடப்பட்டதால், பயன்படுத்த முடியாமல் போனதையொட்டி, கழிப்பறை பூட்டப்பட்டது.
கழிப்பறையில், புதிய பைப், பக்கெட் மற்றும் மின் விளக்கு அமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். என அப்பகுதி பொது மக்கள் மாநகராட்சி அதிகாரிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், 2 வாரங்களுக்கு மேலாகியும் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், அப்பகுதி பொதுமக்கள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, உடனடியாக கழிப்பிடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டுமென, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

