/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காட்சிப்பொருளாக குடிநீர் தொட்டி அதிகாரிகள் ஆய்வு செய்யணும்
/
காட்சிப்பொருளாக குடிநீர் தொட்டி அதிகாரிகள் ஆய்வு செய்யணும்
காட்சிப்பொருளாக குடிநீர் தொட்டி அதிகாரிகள் ஆய்வு செய்யணும்
காட்சிப்பொருளாக குடிநீர் தொட்டி அதிகாரிகள் ஆய்வு செய்யணும்
ADDED : ஜூலை 21, 2025 10:19 PM
உடுமலை; கிராமங்களில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கட்டப்பட்ட கால்நடை குடிநீர் தொட்டி, காட்சிப்பொருளாக மாறியுள்ளது.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றிய கிராமங்களில், கால்நடை வளர்ப்பு பிரதானமாக உள்ளது. மேய்ச்சலுக்கு செல்லும் மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், தொட்டி கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.
இந்த தொட்டியில், முறையாக தண்ணீர் நிரப்ப, குழாய் அமைத்தல் உள்ளிட்ட தேவைகளுக்காகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அனைத்து கிராமங்களிலும், இந்த தொட்டி கட்டப்பட்ட நிலையில், முறையாக பராமரிக்கப்படவில்லை.
சில இடங்களில், பயன்பாட்டுக்கு வராமலேயே குடிநீர் தொட்டிகள் பராமரிப்பின்றி, காட்சிப்பொருளாக மாறி விட்டன.
பொது குடிநீர் தொட்டிகள் மட்டுமே கால்நடைகளுக்கான முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. ஆனால், குடிநீர் தொட்டிகளின் பராமரிப்பில், ஊராட்சி நிர்வாகத்தினர் அலட்சியமாக உள்ளனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள், கிராமந்தோறும் ஆய்வு செய்து, தொட்டியில், குடிநீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.