/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தண்ணீரின் அருமை உணராத அதிகாரிகள்
/
தண்ணீரின் அருமை உணராத அதிகாரிகள்
ADDED : டிச 11, 2025 04:47 AM

தண்ணீர் வீண்
முத்தணம்பாளையம், டி.வி.ஆர். நகரில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலை குழியாகியுள்ளது.
- தங்கராஜ், முத்தணம்பாளையம். (படம் உண்டு)
நல்லுார், பிரபு நகர் எதிர்வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது; சாலையில் வழிந்தோடுகிறது.
- ராகவேந்திரன், பிரபு நகர். (படம் உண்டு)
காங்கயம் ரோடு, சி.டி.சி., கார்னர் ஸ்டாப்பில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.
- ேஷக்சமீரா, காங்கயம் ரோடு. (படம் உண்டு)
பாளையக்காடு, சேர்மன் கந்தசாமி நகரில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சாலை சேதமாகி வருகிறது.
- முருகன், பாளையக்காடு. (படம் உண்டு)
தாராபுரம் ரோடு, குறிஞ்சி நகர் சந்திப்பு சாலையில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலை சேதமாகியுள்ளது.
- கோபாலகிருஷ்ணன், குறிஞ்சி நகர். (படம் உண்டு)
15 வேலம்பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளி வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலை குழியாகியுள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.
- சுதர்சன், 15 வேலம்பாளையம். (படம் உண்டு)
மாநகராட்சி, 32வது வார்டு, சூர்யா காலனி முதல் வீதியில் உப்புத்தண்ணீர் குழாய் கேட்வால்வு பழுதாகி, அடைத்தாலும் தண்ணீர் வீணாகிறது. கேட்வால்வு மாற்ற வேண்டும்.
- கோவிந்தசாமி, சூர்யா காலனி (படம் உண்டு)
----------------------
கால்வாய் அடைப்பு
பெருமாநல்லுார், கணக்கம்பாளையம் பிரிவு சந்திப்பு சாலையில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வழிந்தோடுகிறது. வீதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது.
- நாகராஜ், கணக்கம்பாளையம். (படம் உண்டு)
------------------
சாலை சேதம்
சந்திராபுரம், பாரதிநகர் சாலை சேதமாகி நான்கு மாதமாகியும் சரி செய்யவில்லை. தினம் ஒரு விபத்து நடக்கிறது.- கோகுல், சந்திராபுரம். (படம் உண்டு)
-----------------
எரியாத விளக்கு
ஊத்துக்குளி ரோடு, முதல் ரயில்வே கேட்டில் இருந்து, இரண்டாவது ரயில்வே கேட் வரை தெருவிளக்குகள் எரிவதில்லை.
- பாலசரவணன், கே.பி.என். காலனி.
----
குப்பை தேக்கம்
செல்லாண்டியம்மன் துறை, குடிசை மாற்று வாரிய குடியிருப்பு எதிரே குப்பை நிறைந்து சாலை பாதி வரை வந்துள்ளது. தேங்கிய குப்பைகளை வாரம் ஒருமுறையாவது அள்ள வேண்டும்.
- வாஞ்சிநாதன், மிஷின் வீதி.
----
பல்லாங்குழி சாலை
கோவில்வழியில் இருந்து செவந்தாம்பாளையம் வரும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.
- செல்வம், செவந்தாம்பாளையம். (படம் உண்டு)

