sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'தங்கமே... மறுபடி எப்போ பார்ப்போம்' கதறிய பெற்றோர் - உறவினர்கள்: கலங்கிய பொதுமக்கள்

/

'தங்கமே... மறுபடி எப்போ பார்ப்போம்' கதறிய பெற்றோர் - உறவினர்கள்: கலங்கிய பொதுமக்கள்

'தங்கமே... மறுபடி எப்போ பார்ப்போம்' கதறிய பெற்றோர் - உறவினர்கள்: கலங்கிய பொதுமக்கள்

'தங்கமே... மறுபடி எப்போ பார்ப்போம்' கதறிய பெற்றோர் - உறவினர்கள்: கலங்கிய பொதுமக்கள்


ADDED : ஜூன் 30, 2025 11:49 PM

Google News

ADDED : ஜூன் 30, 2025 11:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி, ; கணவர் வீட்டில் நடந்த கொடுமை காரணமாக, தற்கொலை செய்த ரிதன்யாவின் உடலை பார்த்து, 'தங்கமே... உன்னை மறுபடி எப்போ பார்ப்போம். இப்படி பண்ணிட்டியே தங்கம்...' என பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுததை பார்த்து, அனைவரும் கண்ணீர் வடித்தனர்.

அவிநாசி, கைகாட்டிப்புதுார் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை, 53 - ஜெயசுதா 42 தம்பதி மகள் ரிதன்யா, 27; திருப்பூர் ஈஸ்வரமூர்த்தி, 51, - சித்ராதேவி, 47, தம்பதி மகன் கவின்குமார், 28. இருவருக்கும், கடந்த ஏப்., 11ல், திருமணம்நடந்தது.

கடந்த, 28ம் தேதி மதியம் சேவூர் அருகே மொண்டிபாளையம் செல்லும் ரோட்டில் செட்டிபுதுார் கிராமத்தில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் ரிதன்யா விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

டி.எஸ்.பி., சிவகுமார் தலைமையில், போலீசார் விசாரணை நடத்தினர்.

தற்கொலைக்கு முன் தந்தைக்கு அனுப்பிய 'வாட்ஸ்அப்' ஆடியோவில், ரிதன்யா கண்ணீர் மல்க, ''தனது இறப்புக்கு கணவர்,மாமனார், மாமியார் தான் காரணம்'' என்று கூறியிருந்தார்.

அவர் அனுப்பிய ஆடியோ மற்றும் விசாரணை அடிப்படையில், நேற்று முன்தினம் இரவு, ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகிய மூவரையும் சேவூர் போலீசார் கைது செய்தனர்.

மூவரும் அவிநாசி மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில், கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் திருப்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

உடல்நிலை காரணமாக, சித்ராதேவி, 'விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் ஒத்துழைக்க வேண்டும்; வெளியூர் பயணம் செல்லக்கூடாது' என்ற நிபந்தனையுடன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, ரிதன்யாவின் உடல், வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. பெற்றோர், உறவினர்கள், 'ரிதன்யா தங்கமே... உன்ன மறுபடி எப்போ பார்ப்போம். இப்படி பண்ணிட்டியே தங்கம்...' என கதறி அழுததை பார்த்து அங்கிருந்த அனைவரும் கண்ணீர் விட்டு அழுதனர்.

இளம்பெண் தற்கொலை தொடர்பாக, திருப்பூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., மோகனசுந்தரம், நேற்று காலை இரு வீட்டாரிடமும் விசாரணை நடத்தினார்.

ரிதன்யாவின் நெருங்கிய உறவினர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தவை:

'மாப்பிள்ளை வீடு பாரம்பரியமான வசதியான குடும்பம்,' என சொல்லி, ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரையை சம்மதிக்க வைத்துள்ளனர். திருமணம் நிச்சயமானவுடன் மணமகனுக்கு, 72 லட்சம் மதிப்புள்ள 'வால்வோ' கார் பரிசளிக்க அண்ணாதுரை முடிவு செய்தார்.

கார் புக்கிங் செய்து வந்துள்ள தகவலை கவின்குமாரிடம் கூறிய போது, தனக்கு பிடித்த கலரில் தான் கார் இருக்க வேண்டும் என ரிதன்யாவிடம் போனில் தகராறு செய்துள்ளார். அதுபோலவே காரையும் வாங்கினர். பெண்ணுக்கு,500 சவரன் போட வேண்டும் என அண்ணாதுரையிடம் மாப்பிள்ளை வீட்டார் நிர்பந்தம் செய்துள்ளனர். முதலில், 300 சவரன் நகையும், சொகுசு கார் மற்றும் திருமணச் செலவை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது மாப்பிள்ளை வீட்டாரின் தரப்பில் கறாராக தெரிவித்துள்ளனர்.

ஆனால், ரிதன்யாவின் திருமண வாழ்க்கையில் விதி வேறுவிதமாக விளையாடியது. கணவர் வீட்டில் நாள்தோறும், கவின்குமார், மாமனார், மாமியார் வாயிலாக பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்துள்ளார். தற்போது, ரிதன்யா அநியாயமாக அவர் இறந்து விட்டார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us