/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'சங்கத் மெஷின்ஸ்' சார்பில் 'ஆயில் ப்ரீ' தையல் மெஷின்
/
'சங்கத் மெஷின்ஸ்' சார்பில் 'ஆயில் ப்ரீ' தையல் மெஷின்
'சங்கத் மெஷின்ஸ்' சார்பில் 'ஆயில் ப்ரீ' தையல் மெஷின்
'சங்கத் மெஷின்ஸ்' சார்பில் 'ஆயில் ப்ரீ' தையல் மெஷின்
ADDED : ஆக 28, 2025 05:59 AM

திருப்பூர்; திருப்பூரில் இயங்கி வரும் சங்கத் மெஷின்ஸ் நிறுவனம், சீனாவின் 'ஜேக்' நிறுவனத்தின் தையல் மெஷின்களுக்கான பிரதான வினியோகஸ்தராக செயல்பட்டு வருகிறது.
'ஜேக்' நிறுவனம் தயாரித்த, 'ஆயில் ப்ரீ' தையல் மெஷின்களை, இந்தியாவிலேயே முதன்முறையாக, சங்கத் மெஷின்ஸ் நிறுவனம் திருப்பூரில், நாளை (29ம் தேதி )அறிமுகம் செய்கிறது. வேலன் ஓட்டலில் நடக்கும் விழாவில், திருப்பூர் தொழில் அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்று, அறிமுகம் செய்து வைக்கின்றனர்.
இதுகுறித்து சங்கத் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சேதுபதி தாமோதரன் கூறியதாவது:
உலகத்தரம் வாய்ந்த 'ஜேக்' நிறுவனத்தின் தையல் மெஷின்கள், கடந்த ஓராண்டாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, 'ஏஐ' தொழில்நுட்பத்துடன் கூடிய தையல் மெஷின்களை வழங்கி வருகிறோம்.
கடந்த இரண்டு ஆண்டு களாக, 'சிங்கிள்' ஊசி கொண்ட மெஷினில், 'ஏஐ' தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்டது. இரண்டு லட்சம் 'பேப்ரிக்' டேட்டா பதிவு செய்யப்பட்டிருந்தது. 'சி7' ஓவர்லாக் - 'ஏஐ'சாப்ட்வேர் இணைத்த மெஷின் அறிமுகம் செய்யப்பட்டது.
கண்காட்சியில், 'ஆயில் ப்ரீ' தையல் மெஷின் அறிமுகம் செய்யப்பட உள் ளது; 22 லட்சம் 'பேப்ரிக்' டேட்டா இணைக்கப்பட்டுள்ளது; நான்கு மடங்கு 'பஞ்ச்சிங்' அதிகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நாளை (29ம் தேதி) வேலன் ஓட்டல் மான்செஸ்டர் ஹாலில் நடக்கும் அறிமுக விழாவில், மெஷின் முன்பதிவு செய்பவர்களுக்கு, 10 ஆண்டு கள் 'வாரண்டி' வழங்க இருக்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

