/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
16ம் தேதி பெருமாள் கோவிலில் எங்கெங்கு நோக்கினும் கண்ணனே!
/
16ம் தேதி பெருமாள் கோவிலில் எங்கெங்கு நோக்கினும் கண்ணனே!
16ம் தேதி பெருமாள் கோவிலில் எங்கெங்கு நோக்கினும் கண்ணனே!
16ம் தேதி பெருமாள் கோவிலில் எங்கெங்கு நோக்கினும் கண்ணனே!
ADDED : செப் 07, 2025 02:38 AM

திருப்பூர் : ஹிந்து அறநிலையத்துறை,'தினமலர்' நாளிதழ்,திருவடித் திருத்தொண்டு அறக்கட்டளை,கவிநயா நாட்டியாலயா, எஸ்.எஸ்.வி.எம்., கல்விக்குழுமங்கள் சார்பில்,ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா, திருப்பூர் பெருமாள் கோவிலில் நடக்கிறது.
இதில்,'எங்கெங்கு நோக்கினும் கண்ணனே' என்ற தலைப்பில், கண்ணன் திருவிழா, இசை நிகழ்ச்சியுடன் கூடிய பரத நாட்டிய நிகழ்ச்சி, 16ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் நடக்க உள்ளது. இதில், இரண்டு வயது முதல் குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதையாக வேடமிட்டு, விழாவில் பங்கேற்கலாம். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ், பரிசு வழங்கப்படும். பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளது.
குடும்பத்தில் ஒருவர் மட்டும் பங்கேற்கலாம். ஆர்வமுள்ளவர்கள், வரும், 12ம் தேதிக்குள் 95436 11112 என்ற எண்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். பங்கேற்கும் சிறுவர், சிறுமியருக்கு, எஸ்.எஸ்.வி.எம்., கல்வி குழும நிறுவனம் சார்பில் பரிசு வழங்கப்படுகிறது. முன்னதாக, 15ம் தேதி பெருமாள் கோவிலில், சிறப்பு அபிேஷக பூஜைகள், சங்குப்பால் வழிபாடு ஆகியன நடத்தப்படுகிறது.