/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒரே நாளில் அவசர கதி; 10 இடத்தில் 12 விளையாட்டு போட்டி
/
ஒரே நாளில் அவசர கதி; 10 இடத்தில் 12 விளையாட்டு போட்டி
ஒரே நாளில் அவசர கதி; 10 இடத்தில் 12 விளையாட்டு போட்டி
ஒரே நாளில் அவசர கதி; 10 இடத்தில் 12 விளையாட்டு போட்டி
ADDED : செப் 19, 2024 06:27 AM

திருப்பூர் : முதல்வர் கோப்பை பள்ளி மாணவ, மாணவியர் கிரிக்கெட் போட்டி, டீ பப்ளிக் பள்ளியில் நேற்று நடந்தது.
மாணவர் பிரிவில், 57 அணிகள், மாணவியர் பிரிவில், ஆறு அணிகள் என மொத்தம், 63 அணிகள் பங்கேற்று விளையாடின. ஆறு ஓவர் கொண்டதாக போட்டிகள் நடத்தப்பட்டது. மாணவியர் பிரிவு இறுதி போட்டிக்கு, திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி அணி, பெரியாயிபாளையம் - டீ பப்ளிக் பள்ளி அணி முன்னேறியது.
திருப்பூர், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த, அரசு ஊழியர் வாலிபால் போட்டியில், 16 அணிகளும், ஜெய்வாபாய் பள்ளியில் நடந்த, அரசு ஊழியர் பெண்கள் வாலிபால் போட்டியில் நான்கு அணிகளும் பங்கேற்று விளையாடினர்.
சிக்கண்ணா கல்லுாரியில் பள்ளி மாணவியர் கால்பந்து போட்டி நடந்தது. டீ பப்ளிக் பள்ளியில் டேபிள் டென்னிஸ் போட்டி, எஸ்.டி.ஏ.டி., உள் விளையாட்டு அரங்கில் கல்லுாரி மாணவ, மாணவியர் இறகுப்பந்து போட்டி நடந்தது. பள்ளி மாணவ, மாணவியர் டேபிள் டென்னிஸ், கிரிக்கெட் போட்டி, டீ பப்ளிக் பள்ளியில் நடந்தது. உடுமலை எஸ்.கே.பி., பள்ளியில் எறிபந்து, ஹாக்கி போட்டி நடந்தது.
ஏன் இந்த அவசரம்?
நாளை (20ம் தேதி) காலாண்டு தேர்வுகள் துவங்குவதால், போட்டிகளை நடத்தி முடிக்க வேண்டிய அவசரத்தில், திருப்பூர் மாவட்ட விளையாட்டு பிரிவு (எஸ்.டி.ஏ.டி.,) ஏற்பாடுகளை அவசர கதியில் செய்திருந்தது.
நேற்று ஒரே நாளில், பத்து இடங்களில், 12 போட்டிகள் நடந்ததால், வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில், உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர், பயிற்சியாளர்கள் மட்டுமின்றி வீரர், வீராங்கனையரும் சோர்ந்து போயினர்.
தேர்வு முடிந்து கூட சில போட்டிகளை நடத்தியிருக்கலாம் ஏன் தான் இந்த அவசரமோ என பெற்றோர் பலர் கவலை தெரிவித்தனர்.