/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தென்னையில் நோய் மேலாண்மை விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி
/
தென்னையில் நோய் மேலாண்மை விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி
தென்னையில் நோய் மேலாண்மை விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி
தென்னையில் நோய் மேலாண்மை விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி
ADDED : டிச 31, 2024 06:45 AM
உடுமலை : உடுமலை பெதப்பம்பட்டியில், தென்னையில் நோய் மேலாண்மை குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம், வரும், 3ம் தேதி நடக்கிறது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை., உடுமலை கால்நடை மருத்துவக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கால்நடை தொழில் நுட்ப தகவல் மையம் ஆகியவற்றின் சார்பில், வரும், ஜன., 3ம் தேதி காலை, 10:00 மணிக்கு, உடுமலை அருகேயுள்ள, பெதப்பம்பட்டி, கால்நடை சிகிச்சை வளாகத்தில், தென்னையில் நோய் மேலாண்மை குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் நடக்கிறது.
இதில், கோவை வேளாண் பல்கலை., திருப்பூர் வேளாண் அறிவியல் நிலையம் விஞ்ஞானிகள், சரவணன், கலையரசன் ஆகியோர் பயிற்சியளிக்கின்றனர். தென்னையை தாக்கும் நோய்கள், அவற்றுக்கான தீர்வுகள் உள்ளிட்ட நோய் மேலாண்மை குறித்து பயிற்சியளிக்கின்றனர்.
முதலில் பதிவு செய்யும், 100 விவசாயிகள் மட்டுமே பங்கேற்க முடியும். மேலும் விபரங்களுக்கு, சுரேஷ், 73733 89799 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்துள்ளனர்.