/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சி பகுதியில் ஒரு நாள் குடிநீர் நிறுத்தம்
/
மாநகராட்சி பகுதியில் ஒரு நாள் குடிநீர் நிறுத்தம்
மாநகராட்சி பகுதியில் ஒரு நாள் குடிநீர் நிறுத்தம்
மாநகராட்சி பகுதியில் ஒரு நாள் குடிநீர் நிறுத்தம்
ADDED : நவ 25, 2025 06:06 AM
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் அமித் அறிக்கை:
திருப்பூர் மாநகராட்சி பகுதிக்கு மேட்டுப்பாளையம் பகுதியிலிருந்து 2 மற்றும் 4 வது குடிநீர் திட்டங்களின் கீழ் குடிநீர் கொண்டு வரப்படுகிறது.
இத்திட்டத்தில் பிரதான குழாய்கள் பதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஏர் வால்வுகள் இடம் மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணிகள் காரணமாக இன்றும் நாளையும் (25 மற்றும் 26ம் தேதி) நீரேற்று நிலையங்ளில் நீரேற்றும் பணி தடைப்படும்.
இதனால், மாநகராட்சி பகுதியில் குடிநீர் சப்ளை ஒரு நாள் தடைப்படும். வழக்கமாக குடிநீர் சுழற்சி முறையில் வழங்கப்படும் நாளில், வழங்கப்படும் பகுதிகளுக்கு ஒரு நாள் இடைவெளியில் குடிநீர் வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் குடிநீரை சேமித்தும், சிக்கனமாகப் பயன்படுத்தியும் மாநகராட்சி நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

