/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நல்லாற்றில் பாலம் கட்டுமான பணி 'ஜரூர்'
/
நல்லாற்றில் பாலம் கட்டுமான பணி 'ஜரூர்'
ADDED : நவ 25, 2025 06:06 AM

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில், நான்கு இடங்களில் பாலம் கட்டும் பணி திட்டமிடப்பட்டது.
இதில், ஜம்மனை ஓடையின் குறுக்கில் பெரியார் நகர், நடராஜா தியேட்டர் ரோட்டில் நொய்யல் ஆற்றின் குறுக்கில் ஆகிய இடங்களில் பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இத்திட்டத்தில், ஈஸ்வரன் கோவில் அருகே ஒரு பாலம், நல்லாற்றின் குறுக்கில் ஒரு பாலமும் கட்டும் பணி நடந்து வருகிறது. நல்லாற்றின் மீது, பிச்சம்பாளையம் புதுார் பகுதியையும், பூம்பாறை பகுதியையும் இணைக்கும் வகையில் பாலம் கட்டப்படுகிறது. பாலம் கட்டப்பட்டால், 8 மற்றும் 16 ஆகிய வார்டு பகுதிகள் இணைக்கப்படும். இதனால், போக்குவரத்து வசதி எளிதாகும்.

