ADDED : மார் 25, 2024 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;சேலம், பனமரத்துப்பட்டி, குராள் நத்தத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 31; வெள்ளகோவிலில், கிரேன் ஆப்ரேட்டராக வேலை செய்து வந்தார்.
நேற்று வெள்ளகோவில் கரூர் - கோவை ரோட்டில் நடந்து சென்ற போது, கோவையில் இருந்து கரூர் நோக்கி சென்ற அரசு பஸ், மணிகண்டன் மீது மோதியது. படுகாயமடைந்த அவர் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். வெள்ள கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

