/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மரத்தின் மீது கார் மோதல்: ஒருவர் பலி; ஐவர் காயம்
/
மரத்தின் மீது கார் மோதல்: ஒருவர் பலி; ஐவர் காயம்
ADDED : ஜன 09, 2024 01:00 AM
திருப்பூர்:பழநி கோவிலுக்கு சென்று திரும்பும் போது, காங்கயத்தில் மரத்தின் மீது ஆம்னி கார் மோதியதில் ஒருவர் இறந்தார்; ஐந்து பேர் காயமடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம், பெரியமணாலியை சேர்ந்த பொன்னுசாமி, 37, அண்ணாதுரை, 47, முத்துசாமி, 32, கொண்டான், 55, மவுனிஷ், 10, மவுனிகா, 7 ஆகிய, ஆறு பேரும் மாருதி ஆம்னி காரில் பழநி முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். அதன்பின், இரவு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். 11:30 மணிக்கு காங்கயம், வரதப்பம்பாளையம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த வேப்பமரம் மீது அதிவேகமாக மோதியது. காயமடைந்த அனைவரையும் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
காயமடைந்தவர்களில் அண்ணாதுரை இறந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.