/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிறர் துன்பத்தில் மகிழ்ச்சி கூடாது
/
பிறர் துன்பத்தில் மகிழ்ச்சி கூடாது
ADDED : டிச 25, 2025 05:53 AM
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில்,வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.
சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது:
வன்மம் யாரிடத்திலும் கூடாது. பழி தீர்ப்பது என்பதை மனதால் யாருக்கும் நினைக்கக்கூடாது. நமக்கு யாரேனும் தீங்கு விளைவித்தாலும், அந்த இடத்தில் இருந்து தள்ளி வந்து விட வேண்டும். யார் மீதும் கோபம் கொண்டு பழகக்கூடாது. நமக்குள் மறைந்து இருக்கும் குரோதம், ஏதாவது ஒரு வினாடியில் நம்மை மிருகமாக மாற்றி விடும்.
ஒருவர் செய்த தவறை, முன்பின் அறியாமல் அவர் மீது குற்றம் சாட்டக் கூடாது. ஒருவருடைய துன்பத்தில், நம் மனம் மகிழ்ச்சி அடையக்கூடாது. உள்ளத்தில் பழி எண்ணத்துடன், முகத்தில் சிரிப்புடன் யாருடனும் பழக கூடாது.
ஒருவருடைய தரம் பற்றி பேசுவதற்கு, நமக்கு உரிமை இல்லை. யாரும் யாருக்கும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பது இல்லை. நாம் செய்யும் செயலில் உள்ள நிறை - குறைகளை முதலில் நாம் உணர வேண்டும். அதில் உள்ள தவறை சுட்டிக் காட்டுபவர் மீது கோபம் கொள்ள கூடாது.

