/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மேயர் தினேஷ்குமார் வார்டில் சாக்கடை அடைப்பு சீரானது
/
மேயர் தினேஷ்குமார் வார்டில் சாக்கடை அடைப்பு சீரானது
மேயர் தினேஷ்குமார் வார்டில் சாக்கடை அடைப்பு சீரானது
மேயர் தினேஷ்குமார் வார்டில் சாக்கடை அடைப்பு சீரானது
ADDED : டிச 25, 2025 05:54 AM
திருப்பூர்: மேயர் தினேஷ்குமாரின், மாநகராட்சி 49வது வார்டு, செரங்காடு பகுதியில் சாக்கடை கால்வாய் அடைப்பு காரணமாக வீதி முழுதும் கழிவு நீர் வழிந்தோடியது.
சுப்பிரமணி நகர், என்.பி. நகர், குறுக்கு வீதிகளில் கழிவு நீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. அதில் சுப்பிரமணி நகர் வீதிகளில் அமைந்துள்ள கால்வாய்களில் சேகரமாகும் கழிவு நீர் பிரதான கால்வாயை அடைந்து அருகேயுள்ள ஓடையில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டது.
கால்வாய் அடைப்புகளை முறையாக அகற்றி, துார்வராத காரணமாக கழிவு நீர் ரோட்டில் சென்று, வீடுகள் முன் தேங்கி நின்று கடும் துர்நாற்றம் வீசியது. இதுதொடர்பான செய்தி, படத்துடன் 'தினமலர்' நாளிதழில் நேற்று வெளியானது. செய்தி எதிரொலியாக, அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் அடைப்பு எடுக்கும் பணி, மாநகராட்சி பணியாளர்கள் வாயிலாக நடந்தது. கால்வாயில் தேங்கியிருந்த மண் போன்றவற்றை முழுமையாக அகற்றப்பட்டு, சீரமைக்கப்பட்டது.

