/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'சதம்' அடித்த வெங்காய விலை; விவசாயிகள் மகிழ்ச்சி
/
'சதம்' அடித்த வெங்காய விலை; விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜன 20, 2025 11:38 PM
பொங்கலுார்; வைகாசி பட்டத்தில் நடவு செய்த சின்ன வெங்காயம் அறுவடைக்கு வந்தபோது போதிய விலை கிடைக்கவில்லை. இதனால், பெரும்பாலான விவசாயிகள் திறந்தவெளியில் பட்டறை அமைத்து இருப்பு வைத்திருந்தனர். வெளியூர் காய் வரத்தும் இருந்தது.
கார்த்திகை பட்ட நடவு சீசனின் போது விலை உயரும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர்.
ஆனால், அப்போதும் எதிர்பார்த்த அளவு விலை உயரவில்லை. நீண்ட நாள் இருப்பு வைத்ததால் எடை குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் இருப்பில் இருந்த சின்ன வெங்காயத்தை விற்பனை செய்ய துவங்கினர். தற்போது இருப்பு வெங்காயம் பெரும்பாலும் விற்றுத் தீர்ந்து விட்டது. வெளியூர் காய் வரத்தும் குறைந்துவிட்டது. கார்த்திகை மாதத்தில் மழை பெய்ததால் விவசாயிகள் தாமதமாக சின்ன வெங்காய நடவு பணியை துவக்கி உள்ளனர்.
இதனால், தேவை அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து சின்ன வெங்காயம் கிலோ, 100 ரூபாய் வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
சின்ன வெங்காயம் விலை உயர்ந்த போதிலும் அதன் பயனை அனுபவிக்க முடியாமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

