ADDED : பிப் 22, 2024 05:42 AM
திருநெல்வேலி ஜங்ஷனுக்கு உட்பட்ட மேலப்பாளையத்தில் பொறியியல் மேம்பாட்டு பணி பத்து நாட்களுக்கு நடக்கிறது. இதனால், கோவையில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு வழியாக நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:16322) பிப்., 23 முதல், 28 வரை ஆறு நாட்களுக்கு திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கமாக நாகர்கோவிலுக்கு பதில், திண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு இயக்கப்படும்.
மும்பை தாதர் - திருநெல்வேலி வாராந்திர ரயில் (எண்:22629) வியாழன் இரவு புறப்பட்டு, சனிக்கிழமை மாலை திருநெல்வேலி வந்து சேர்கிறது; பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக பயணிக்கும் இந்த ரயில் வரும், 24 ம் தேதி, மதுரை வரை மட்டும் இயங்கும். விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஜங்ஷன் செல்லாது. வரும், 28 ம் தேதி திருநெல்வேலிக்கு பதிலாக, மதுரையில் இருந்து மும்பை தாதருக்கு ரயில் (எண்:22630) இயக்கப்படும்.