/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திறந்தவெளி கால்வாய்; காத்திருக்கும் அபாயம்
/
திறந்தவெளி கால்வாய்; காத்திருக்கும் அபாயம்
ADDED : அக் 18, 2024 11:32 PM

பல்லடம் : பல்லடம் ஒன்றியம், செம்மிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கே.என்.புரம் பகுதியில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இங்குள்ள நால்ரோடு பகுதியில், சாக்கடை கால்வாயின் ஒரு பகுதி திறந்த நிலையில் உள்ளது. குடியிருப்புகள், கடைகள், வணிக வளாகங்கள் உள்ள இப்பகுதியில், மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இந்த இடத்தில், சாக்கடை கால்வாய் திறந்த நிலையில் உள்ளது.
'நோ பார்க்கிங்' பலகை மற்றும் பிளக்ஸ் பேனர் ஆகியவற்றைக் கொண்டு இப்பகுதி மக்கள், சாக்கடை கால்வாயை தற்காலிகமாக மூடிவைத்துள்ளனர்.
இருப்பினும், தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில், மழைநீரில் மூழ்கி சாக்கடை கால்வாய் தெரியாத நிலை ஏற்படும். இது, இவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு விபத்து அபாயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால், விபத்து அபாயத்தை கருத்தில் கொண்டு, சாக்கடை கால்வாயை மூடி, பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.