/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திறந்த வெளி கழிப்பிடம் 'கன்ஸ்யூமர் விங்' ஆட்சேபனை
/
திறந்த வெளி கழிப்பிடம் 'கன்ஸ்யூமர் விங்' ஆட்சேபனை
ADDED : நவ 02, 2024 11:00 PM
திருப்பூர்: திறந்த வெளி கழிப்பிடம் அறிவிப்பு குறித்து மாநகராட்சிக்கு 'கன்ஸ்யூமர் அவேர்னஸ் விங்' ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாநகராட்சி பகுதி திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத பகுதியாக அறிவிப்பது குறித்து மாநகராட்சி நிர்வாகம் அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இது குறித்து திருப்பூர் கன்ஸ்யூமர் அவேர்னஸ் விங் இணை செயலாளர் ரவி, மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்பிய கடித விவரம்:
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 40வது வார்டு இடுவம்பாளையம், இ.பி., ஆபீஸ் ரோடு, கொக்குப்பாறை, இடுவாய் ரோடு ஆகிய பகுதிகள் திறந்த வெளி கழிப்பிடங்களாகப் பயன் படுத்தப்படுகிறது. இது குறித்து கடந்த 2023ம் ஆண்டே மாநகராட்சிக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, 38, 39, 41 ஆகிய வார்டுகளிலும் சில இடங்கள் திறந்த வெளி கழிப்பிடங்களாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த பகுதிகளை தவிர்த்து விட்டு வேண்டுமானால், திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத மாநகராட்சி என அறிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.