/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மனம் திறந்து பேசுங்கள் அ.தி.மு.க.,வினருக்கு அறிவுரை
/
மனம் திறந்து பேசுங்கள் அ.தி.மு.க.,வினருக்கு அறிவுரை
மனம் திறந்து பேசுங்கள் அ.தி.மு.க.,வினருக்கு அறிவுரை
மனம் திறந்து பேசுங்கள் அ.தி.மு.க.,வினருக்கு அறிவுரை
ADDED : மார் 18, 2024 12:26 AM
திருப்பூர்;''சமூக வலைதளங்கள் மட்டுமே நமக்கு கை கொடுக்காது, வாக்காளர் பட்டியலுடன் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டுங்கள்'' என, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர், 'பூத்' கமிட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில், அ.தி.மு.க., வில். கூட்டணி பேச்சுவார்த்தை வேகமெடுத்துள்ளது. திருப்பூர் தொகுதியில், தேர்தல் பணிகளை உடனே துவக்குமாறு, மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
குறிப்பாக, 'பூத்' கமிட்டி உறுப்பினர்கள், களமிறங்கி பணியாற்ற வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார். தகவல் தொழில்நுட்ப பிரிவினர், இத்தகவலை வேகமாக பரப்பி வருகின்றனர்.
சமூக வலைதளம் மட்டுமே நமக்கு கை கொடுக்காது. தயவு செய்து, வாக்காளர் பட்டியலுடன், வீடு வீடாக சென்று ஆதரவு திரட்ட வேண்டும். வேலை பார்க்கும் நிறுவனங்களில், சக ஊழியர் களிடம் பேச வேண்டும். வீடுகளில், குடும்ப உறுப்பினர், உறவினர்களுடன் மனம் திறந்து பேச வேண்டும்.
இ.பி.எஸ்., ஆட்சி, அவரது ஆளுமை குறித்தும், மத்திய, மாநில அரசுகள் மீதுள்ள வெறுப்பு குறித்தும் மக்களிடம் விரிவாக பேச வேண்டும். பனியன் தொழில் பாதிப்பு குறித்தும், மூன்றாண்டு தி.மு.க., ஆட்சியின் வரி உயர்வுகள் குறித்தும் நினைவுபடுத்த வேண்டும். தி.மு.க., ஆட்சியை வீழ்த்த, ஓட்டுகள் சிதறாமல் அ.தி.மு.க.,வுக்கு கிடைக்க வேண்டும் என்பதை, மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
லோக்சபா தேர்தலில் கட்சியின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று, பொள்ளாச்சி ஜெயராமன் அறிவுறுத்தியுள்ளார்.
சமூக வலைதளம் மட்டுமே நமக்கு கை கொடுக்காது. தயவு செய்து, வாக்காளர் பட்டியலுடன், வீடு வீடாக சென்று ஆதரவு திரட்ட வேண்டும். வேலை பார்க்கும் நிறுவனங்களில், சக ஊழியர்களிடம் பேச வேண்டும். வீடுகளில், குடும்ப உறுப்பினர், உறவினர்களுடன் மனம் திறந்து பேச வேண்டும்.

